இங்கிலாந்திற்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை - அலெக்ஸ் ஹேல்ஸ்!
இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை என அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏழாவது டி 20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
Trending
அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலக கோப்பை ஆகும். இந்த இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் முதலில் இடம் பெற்றிருந்தார். அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் காயம் காரணமாக வருகிற உலக கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஜானி பேர்ஸ்டோவ் அறிவித்திருந்தார். காயம் அடைந்த பேர்ஸ்டோக்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்று வீர்ரை அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில் அவருக்கு மாற்றாக மூன்றாண்டுகளாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸுற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னால் மீண்டும் இங்கிலாந்து அணிக்குள் இடம்பிடிக்க முடியும் என எதிர்பார்க்கவில்லை என அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த மூன்று வருடங்களாக என்னால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்த போது, நான் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக தேர்வு செய்யப்படுவேன் என எதிர்பார்க்கவே இல்லை.
ஆனால் நான் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சில மாதங்கள் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now