
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில் ஓவ்வொரு அணியும் அதிகபடியான இரதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றில் தேர்ச்சியடையாத அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இது அயர்லாந்து அணிக்கு சாதரணமான போட்டியாக இருந்தாலும், இங்கிலாந்தை பொறுத்தவரையில் அவர்களுக்கான பயிற்சி ஆட்டமாகவே இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானாது, 26ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி ஹெடிங்லேவிலும், இரண்டாவது போட்டி டிரெண்ட் பிரிட்ஜிலும், மூன்றாவது போட்டி பிரிஸ்டோலிலும் நடைபெறவுள்ளது.