பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
ஒருநாள் போட்டிகள் ராவல்பிண்டியிலும், டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருந்தது.
Trending
ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது.
இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது.
மேலும் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானும் உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்தோம். நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
உலகளவில் சிறந்த புலனாய்வு அமைப்பு எங்களிடம் உண்டு. அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். நியூசிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரிகளும் எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். கடைசி நேர விலகலால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now