சாம்பியன்ஸ் கோப்பை 202: மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
Trending
இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இத்தொடருக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதில் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், டெவான் கான்வே மற்றும் லோக்கி ஃபெர்குசன் உள்ளிட்டோர் மீண்டூம் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து வில் யங், வில்லியம் ஓருர்க், பென் சீயர்ஸ், நாதன் ஸ்மித் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டாம் லேதம், டேரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல் உள்ளீட்டோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now