
New Zealand Bowlers' Consistency Lead To Breakthroughs, Says Virat Kohli (Image Source: Google)
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கோலி, “நியூசிலாந்து மிகவும் திறமையான அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசுகின்றனர். தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை செய்வோம்.