
New Zealand Brings In Ferguson, Bracewell & Allen In T20 World Cup Squad (Image Source: Google)
எட்டாவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
அதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளன.
இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிம்மி நீஷம், லோக்கி ஃபர்குசன், டேவான் கான்வே, மார்க் சாப்மேன், டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.