நியூசி கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியது.
நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், தற்போது நம்பர் ஒன் ஒருநாள் பந்துவீச்சாளராகவும் திகழ்பவர் ட்ரெண்ட் போல்ட். இவர் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 78 டெஸ்ட், 93 ஒருநாள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் அதில் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Trending
இந்நிலையில், தனது குடும்பத்துடன் நேரம் ஒதுக்க மற்றும் லீக் போட்டிகளில் பங்கேற்க தனக்கு ஓய்வளிக்கும் படி ட்ரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியது.
தற்போது 33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கையை ஒப்புக்கொண்டது. இதனால் இனி வரும் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் "தனது மத்திய ஒப்பந்தத்திலிருந்து ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டது, இதனால் அவர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும், அதே நேரத்தில் உள்நாட்டு லீக்குகளையும் அவரால் விளையாட முடியும். அதேசமயம் திட்டமிட்டபடி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை போல்ட் முடிப்பார்” என்று அறிவித்துள்ளது.
NEWS | NZC has agreed to release Trent Boult from his central contract so that he can spend more time with his family, while also making himself available for domestic leagues. Boult will complete the tour of the West Indies as scheduled.
— BLACKCAPS (@BLACKCAPS) August 9, 2022
READ MORE https://t.co/SxFsTymGAN
இதுகுறித்து ட்ரெண்ட் போல்ட் கூறுகையில், "இது எனக்கு மிகவும் கடினமான முடிவு மற்றும் இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது, என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து கிரிக்கெட் மூலம் பல சாதனைகள் புரிந்தேன். இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது, அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன்.
இந்த நடவடிக்கையானது நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு இன்னும் பெரிய ஆசை உள்ளது, மேலும் சர்வதேச அளவில் வழங்குவதற்கான திறமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், தேசிய ஒப்பந்தம் இல்லாதது எனது தேர்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்ற உண்மையை நான் மதிக்கிறேன். மேலும் இந்த அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்" என்று போல்ட் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now