நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டுனேடினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அலிக் அதனேஸ் ஒரு ரன்னிலும், அகீம் அகஸ்டே 8 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடியா ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பாவெல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என்று அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் அதிரடியாக விளையாடியா ரொமாரியோ ஷெஃபெர்ட் 36 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.