NZ vs SL, 1st ODI: கருணரத்னே அசத்தல்; இலங்கைக்கு 275 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 275 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட் பவுஸ் மற்றும் பின் ஆலென் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாட் பவுஸ் 14 ரன்னில் வீழ்நதார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் ஆலென் அரைசதம் அடித்து அசத்தினார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய வில் யங் 26 ரன், டேரில் மிட்செல் 47 ரன், டாம் லதாம் 5 ரன், கிளென் பிலிப்ஸ் 39 ரன், ரச்சின் ரவிந்திரா 49 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் சமிகா கருணாரத்னே 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி கமிறங்கியுள்ளது. தற்போது வரை அந்த அணி 2 ஓவர்களில் 14 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now