NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6)வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.
Trending
இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நியூசிலாந்தின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The Playing XI were presented their caps today by former @englandcricket rep @Harmy611 at the Cello @BasinReserve.
Players are re-presented their cap ahead of every Test match. #NZvENG pic.twitter.com/Hth9K5wJFh— BLACKCAPS (@BLACKCAPS) December 5, 2024அதன்படி தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் உள்பட முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், டிம் சௌதி, மேட் ஹென்றி, வில் ஓ ரூர்க்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர்.
Win Big, Make Your Cricket Tales Now