
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இத்தொடரின் இறுதிப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற நிலையில், இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் ஷகீல் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களை எடுத்த விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் முகமது ரிஸ்வான் 4 பாவுண்டரி, ஒரு சிக்ஸர் என 46 ரன்னிலும், சல்மான் ஆகா 45 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.