
டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். அதிரடி வீரர் காலின் முன்ரோ,காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற எண்ணினேன். வாய்ப்பு கிடைக்காததில் வேதனையில் உள்ளேன். நியூசிலாந்து அணிக்காக என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடி விட்டதாக நினைக்கிறேன் என்று இன்ஸ்டகிராமில் மன்றோ கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள், 65 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற மன்றோ. நியூசிலாந்து அணிக்காக கடைசியாக பிப்ரவரி 2020-ல் டி20 ஆட்டத்தில் விளையாடினார். கடந்த வருடம் ஒப்பந்தத்திலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. பிஎஸ்எல், சிபிஎல், பிபிஎல், தி ஹண்ட்ரெட் என லீக் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக மன்றோ சிறப்பாக விளையாடி வருகிறார்.