
டி20 உலகக்கோப்பை 2026: எதிவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இத்தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இத்தொடரில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ளன.
அதேசமயம் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இடம்பிடித்த அமெரிக்க அணியும் இத்தொடருக்கு நேரடியாக தககுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யபடவுள்ளன. இதன் காரணமாக அனைத்து அணிகளும் இத்தொடருக்காக தீவிரமான தயாரிப்புகளில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நியூசிலாந்து அணியும் தங்களுடைய தயாரிப்புகளில் இறங்கியுள்ளது.