
New Zealand name squad for Australia ODIs, fit-again Matt Henry returns (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் காயம் காரணமக கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணியை வழிநடத்துகிறார்.
அதேபோல் காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் விளையாடமால் இருந்த நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி இத்தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேவேளையில் கைல் ஜேமிசன், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரை தவறவிடுகின்றனர்.