
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த இலங்கை, டி20 தொடரை 1-2 என்ற கணக்கிலும் இழந்தது. இந்தியா தொடருக்குப் பிறகு இலங்கை அணி எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை.
வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலிம், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரையில் கிறிட்ஸ்சர்ஜ்ஜில் நடக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி 17 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரையில் வெல்லிங்டனில் நடக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இலங்கை அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் மூலமாக நிஷான் மதுஷ்கா மற்றும் மிலான் ரத்னயாகே ஆகியோர் இலங்கை அணியில் அறிமுகமாகின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணி தற்சமயத்தில் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.