
நியூசிலாந்து அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து வங்கதேச அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17ஆம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லேதம் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், இஷ் சோதி, கைல் ஜேமிசன், வில் யங், ஃபின் ஆலன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.