
இந்தியா - நியூசிலாந்து மோதிய இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள்ல் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பாக மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் இறுதிவரை அவர்கள் வெற்றிக்காக போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில், “இந்த போட்டியில் மைக்கல் பிரேஸ்வெல் விளையாடிய இந்த இன்னிங்ஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸ். ஒரு கட்டத்தில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் அவர் வந்து விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நமது அணி இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது வெற்றியை நோக்கி அவர் கிட்டத்தட்ட அழைத்து வந்தது மிகச் சிறப்பாக இருந்தது.