Advertisement

NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து?

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 02, 2024 • 12:17 PM
NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து?
NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து? (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது.  நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Trending


இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலீப்ஸ், மேத் ஹென்றி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 71 ரன்களையும், மேட் ஹென்றி 42 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், நாதன் லையன் 6 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தானர்.

இதில் கவாஜா 28 ரன்களிலும், நாதன் நலையன் 41 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 34 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலீப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனால் நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 8 ரன்களுக்கும், வில் யங் 15 ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா  - டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதில் ரச்சின் ரவீந்திரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா 59 ரன்களையும், டேரில் மிட்செல் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி நாளை இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement