Advertisement

10ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

Advertisement
10ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
10ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 17, 2023 • 10:19 PM

இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 17, 2023 • 10:19 PM

இதன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இறுதியாக கடந்த 2013ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு முழு தொடரில் விளையாடியது. அதில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 கொண்ட முழு தொடரில் விளையாடியது. அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து தற்போதுதான் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட செல்கிறது.

Trending

ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. அதன் பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 3 போட்டிகளும் மிர்புர் நகரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

  • முதலாவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 21
  • 2வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 23
  • 3வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 26
  • முதலாவது டெஸ்ட்: 28 நவம்பர் முதல் டிசம்பர் 2 வரை
  • 2வது டெஸ்ட்: டிசம்பர் 6 முதல் 10 வரை.

உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. வங்கதேசம் தனது முதலாவது போட்டியில் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement