டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் போட்டியை உற்றுநோக்கும் இந்திய ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையுமா என்பது இன்று நடக்கும் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டியின் முடிவில் ஓரளவு தெரிந்து விடும்.
உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த இந்திய அணி சூப்பர் 12-இன் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் சரண்டர் ஆனது. பின்னர் சுதாரித்த இந்திய அணி குட்டி நாடுகளான ஆஃப்கன், ஸ்காட்லாந்தை துவம்சம் செய்து, ஃபார்முக்கு திரும்பியது.
இதன் அடிப்படையில் 4 போட்டிகளில் 2-இல் வெற்றி பெற்று 4 புள்ளிகள் மற்றும் +1.619 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 2 பிரிவில் 3ஃஃம் இடத்தில் உள்ளது.
Trending
குரூப் 1-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப் 2-இல் பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இந்த குரூப்பில் அரையிறுதிக்கு செல்லும் அடுத்த அணி என்பதில்தான் நியூசிலாந்து, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் இடையே போட்டி காணப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று மிக முக்கியமான ஆட்டம் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி மதியம் 3.30-க்கு நடைபெறுகிறது. இதில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று விட்டால் நியூசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறி விடும். வெற்றியின் மூலம் 2 புள்ளிகளைப் பெறும் ஆஃப்கன் ஏற்கனவே 2 வெற்றிகளுடன் மொத்தம் 6 புள்ளிகளைப் பெறும்.
ஆனால், இதன் நெட் ரன்ரேட் இந்தியாவை விட குறைவாக இருப்பதால் (இந்தியா +1.619, ஆப்கன் +1.481) அரையிறுதிக்கு செல்ல இந்தியா - நமீபியா போட்டியின் முடிவுக்காக ஆஃப்கன் காத்திருக்க வேண்டும். அதற்கு அவசியம் இருக்காது என்று அனைவருக்கும் தெரியும்.
இன்றைய போட்டியில் ஆஃப்கன் நியூசிலாந்தை வீழ்த்தி விட்டால் 6 புள்ளிகளை பெற்று பிரிவில் 2-ஆம் இடத்துக்கு செல்லும். அதே நேரத்தில் ஆஃப்கனின் நெட் ரன்ரேட்டில் மாற்றம் ஏற்படும். இந்த நெட் ரன்ரேட்டை முந்தும் வகையில் நமீபியாவை வீழ்த்தி விட்டால், இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து விடும்.
ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று விட்டால், கால்குலேஷனுக்கு எல்லாம் அவசியம் இருக்காது. இந்தியா நமீபியா ஆட்டத்திற்கு பின்னரும், ஆஃப்கானிஸ்தான் அடுத்த ஃப்ளைட்டையும், பிடித்து நாடு திரும்பி விடலாம். எனவே இன்றைய ஆட்டத்தில் அதிக அனுபவம் இல்லாத ஆஃப்கன் அணி, மிக வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொண்டாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே இந்த ஆட்டத்தை எதிர்பார்த்துள்ளனர்.
Also Read: T20 World Cup 2021
ஆஃப்கனின் வெற்றியை இந்தியா எதிர்பார்த்துள்ளது என்ற ரீதியில், சமூக வலைதளங்களில் இந்திய அணி மீது விமர்சனம் எழுகிறது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். ஆட்டத்தில் எந்த அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்துகிறதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது இயல்பு. அந்த வகையில் இந்தியா எந்த வகையில் அரையிறுதிக்கு சென்றாலும் அதன் சொந்த முயற்சிதான் காரணம் என்பதுதான் எதார்த்தம்.
Win Big, Make Your Cricket Tales Now