AUS vs NZ: போக்குவரத்து நெறிமுறை காரணமாக டி20 தொடர் ரத்து!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது போக்குவரத்து நெறிமுறைகள் காரணமாக ரத்துசெய்யப்பட்டது.

வருகிற மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.
மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்து அரசு தற்போது கரோனா கட்டுபாடுகளை அதிகரித்துள்ளதால், நியூசிலாந்து வரும் வீரர்களுக்கு கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் கூட்டாக இணைந்து, இத்தொடர் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த மாதம் பே ஓவலில் நடைபெற இருந்த நெதர்லாந்துடனான டி20 தொடரானது தற்போது நேப்பியருக்கு மாற்றப்படுவதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now