
டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் இரண்டிலிருந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் குரூப் 1இல் தான் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து அணி 3 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளையும், ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளையும், இங்கிலாந்து அணி 3 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது. நாளை பிரிஸ்பேனில் நடக்கும் முக்கியமான போட்டியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதுகின்றன.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுமே 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகள் என்ற நிலையில் இருக்கும். 3 அணிகளில் கடைசி போட்டியில் வெல்லும் 2 அணிகள் அல்லது 3 அணிகளும் கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.