நியூசிலாந்து vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் கடந்த 18ஆஅந்தேதி இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மவுண்ட் மாங்கானுயிவில் நேற்று நடந்த 2ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.
Trending
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியாரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இந்தியா
- இடம் - மெக்லீன் பார்க், நேப்பியர்
- நேரம் - நேரம் 12 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் ஹர்திக் பாண்டியா போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர்.
அதேசமயம் கடந்த போட்டியில் சொதப்பிய ரிஷப் பந்திற்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படு என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பந்துவீச்சில் தீபக் ஹூடா தீடீரென் விஸ்வரூபமெடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் அவரது மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். சொந்த மண்ணில் விளையாடும் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றால் அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.
அதேசமயம் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டிம் சௌதீ அணியை வழிநடத்தவுள்ளார். அதேபோல் மார்க் சாப்மேனுக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
மேலும் ஃபின் ஆலன், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன், ஆடம் மில்னே, இஷ் சோதி ஆகியோரும் இப்போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 21
- இந்தியா - 10
- நியூசிலாந்து -09
- முடிவில்லை - 02
போட்டியை எப்படி காணுவது?
இப்போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது. இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை தூர்தர்ஷனிலும் கண்டுகளிக்கலாம்.
உத்தேச லெவன்
நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ (கே), ஆடம் மில்னே, லோக்கி ஃபர்குசன்.
இந்தியா - இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன்
Win Big, Make Your Cricket Tales Now