
NZ-W vs BAN-W, Match 11, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலந்து அணி தங்களின் முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. மறுபக்கம் வங்கதேச அணியும் தோல்விக்கு பிறகு இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
NZ-W vs BAN-W: Match Details
- மோதும் அணிகள் - நியூசிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர்
- இடம் - பர்சபாரா கிரிக்கெட் மைதானம், கவுகாத்தி
- நேரம்- அக்டோபர் 10, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)
NZ-W vs BAN-W: Live Streaming Details
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
NZ-W vs BAN-W: Head-to-Head in ODIs
- Total Matches: 04
- New Zealand Women: 02
- Bangladesh Women: 00
- No Result: 02