
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோ (Image Source: Cricketnmore)
New Zealand Women vs South Africa Women Prediction, ICC Women's World Cup 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் ஏழாவது லீக் போட்டியில் சோஃபி டிவைன் தலைமையிலன நியூசிலாந்து அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
NZ-W vs SA-W, ICC Women's World Cup 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர்
- இடம் - ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
- நேரம்- அக்டோபர் 06, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)