
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் டேவன் கான்வே - டாம் லேதம் இணை களமிறங்கியது. இதில் லேதம், வில்லியம்சன், டெய்லர் என ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடி காட்டிய கான்வே தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் டேவன் கான்வே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். அதாவது நேற்று அறிமுக வீரராக களமிறங்கிய டெவன் கான்வே 136 நாட் அவுட் என்று முதல்நாளை முடித்தார், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு வீரர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரான இந்தியாவின் சவுரவ் கங்குலியின் 131 ரன்கள் என்ற 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் கான்வே.