
New Zealand's Finn Allen Tests Covid Positive On Arrival In Bangladesh (Image Source: Google)
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி வங்கதேசம் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தி ஹண்ரட் தொடரில் விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் இங்கிலாந்திலிருந்து நேரடியாக தாக்க வந்தடைந்தார்.
அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.