IND vs NZ: டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான 17 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும் இலங்கை அணியிடம் படுதோல்வியைத் தழுவியதுடன், ஒயிட்வாஷ் ஆனது.
இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 37,50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரானது எதிவரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 05ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ விலகுவதாக அறிவித்தார்.
Trending
முன்னதாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, டிம் சௌதீ டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது தலைமையில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இத்தோல்விக்கு பொறுபேற்கும் வகையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சௌதீ விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் டாம் லேதமே அணியின் கேப்டனாக வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இடம்பிடித்துள்ள நிலையிலும், காயம் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகியுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் சாப்மேனிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த அணியில் இடம்பிடித்துள்ள மைக்கேல் பிரேஸ்வெல் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்றும், குழந்தை பிறப்பு காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்பதனையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. அதேசமயம் இஷ் சோதி இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இணைவார் என்பதையும் தெரிவித்துள்ளார். இதுதவிர, டாம் பிளண்டல், கிளென் பிலீப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், டிம் சௌதீ, அஜாஸ் படேல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்
Win Big, Make Your Cricket Tales Now