உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களிலேயே ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைக் குவித்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 462 ரன்களை குவித்த நிலையிலும், நியூசிலாந்துக்கு 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. பின்னர் நியூசிலாந்து அணியானது எளிதாக இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆராம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது.
Trending
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், 68.06 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.
அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்றுள்ள நியூசிலாந்து அணியானது 44.44 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதுதவிரித்து பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியின் காரணமாக இங்கிலாந்து அணி 43.06 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்க அணியானது 38.89 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது.
India Continues to be on Top despite the loss against New Zealand!#INDvNZ #India #TeamIndia #WTC #NewZealand pic.twitter.com/5aW9mmN7PM
— CRICKETNMORE (@cricketnmore) October 20, 2024
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து வங்கதேச அணியானது 34.38 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 25.93 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியானது தொடர்ந்த ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்சமயம் பின்னடைவை சந்தித்துள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now