
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த நிக்கோலஸ் பூரன்! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிஎற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
பொல்லார்ட், டிராவிஸ் ஹெட் சாதனை முறியடிப்பு