Advertisement

ஐபிஎல் ஏலம் 2022: நிக்கோலஸ் பூரனை தட்டித்தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

Advertisement
Nicholas Pooran gets the joint fourth-highest bid ever as Lucknow Super Giants get the West Indies b
Nicholas Pooran gets the joint fourth-highest bid ever as Lucknow Super Giants get the West Indies b (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 23, 2022 • 04:37 PM

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்து  ஆல்ரவுண்டர் சாம் கரனை அதிகபட்சமாக ரூ.18.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. அவரை எடுக்க முயன்று முடியாமல் போன சிஎஸ்கே அணி, சீனியர் ஆல்ரவுண்டரும் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு எடுத்தது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 23, 2022 • 04:37 PM

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் மீது ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டியது. ஆனால் ரூ.16.25 கோடிக்கு ஸ்டோக்ஸையும், ரூ.50 லட்சத்திற்கு ரஹானேவையும் எடுத்துவிட்டதால், கையில் மூன்றரை கோடி மட்டுமே மீதம் இருந்ததால் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே.

Trending

டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பூரனுக்காக போட்டி போட்டன. இரு அணிகளும் கடுமையாக போட்டி போட, பூரனின் விலை எகிறியது. கடைசி வரை விட்டுக்கொடுக்காத லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது.

நிகோலஸ் பூரன் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இருந்தாலும் அபாரமான ஃபீல்டரும் கூட. காட்டடி அடித்து மிரட்டக்கூடிய பேட்ஸ்மேன். நிலையான, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் அவரது பிரச்னை. ஆனால் அடிக்க ஆரம்பித்துவிட்டால், மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர் பூரன். அந்தவகையில், அவரை பெரும் தொகை கொடுத்து எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement