Advertisement

வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்; வைரல் காணொளி!

சியாட்டில் ஆர்காஸ் அணிக்கெதிரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதியிப்போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எம்ஐ நியூயார்க் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Advertisement
வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்; வைரல் காணொளி!
வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்; வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 31, 2023 • 04:01 PM

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டின் வருகை மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இமாலய வெற்றி எல்லாம் சேர்ந்து கிரிக்கெட்டை டி20 வடிவத்தில் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் நடத்தப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 31, 2023 • 04:01 PM

இந்தத் தொடரிலும் அணிகளை வாங்கி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள் ஐபிஎல் தொடரின் அணி உரிமையாளர்கள். பிளே ஆப் சுற்றில் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ள டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. இதற்கு அடுத்து இன்று சீயாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சீயாட்டில் ஆர்காஸ் அணி குயின்டன் டி காக் அதிரடியில் 183 ரன்கள் குவித்தது.

Trending

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் விக்கெட் விழ, அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். முதல் ஓவரில் தான் சந்தித்த மூன்று பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு கணக்கை ஆரம்பித்தார். இதற்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச வந்தார்.

அந்த ஓவரில் 6,6,4,6,4,1 என பூரன் வெளுத்துக்கட்டி 27 ரன்கள் குவித்தார். மேலும் பவர் பிளே முடிவதற்குள் நான்கு ஓவர்களில் 16 பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டினார். மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் இதுதான். தொடர்ந்து விளையாடிய நிக்கோலஸ் பூரன் பவர் பிளேவின் முடிவில் 6 ஓவர்களில் 22 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது.

மேலும் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் சதத்தை அடித்து அட்டகாசப்படுத்தினார். இவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆவது உறுதியானது. தொடர்ந்து விளையாடிய அவர் 55 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர்கள் உடன் 137 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்து, மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வைத்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக சொந்த நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்காமல் நிக்கோலஸ் பூரன் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து இந்திய அணிக்கு எதிராக நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement