
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது.
இந்த டி20 உலக கோப்பையின் தொடர் நாயகனை ரசிகர்களே தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது ஐசிசி. அதற்காக இந்த தொடரில் சிறப்பாக ஆடிய, தொடர் நாயகன் விருதுக்கு தகுதியான 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. டி20 உலக்கோப்பை இணையத்தில் வீரர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதில் அதிக வாக்குகளை பெற்றவர் தொடர் நாயகன் விருதை வெல்வார்.
தொடர் நாயகன் விருதுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா 2 வீரர்கள், அதிகபட்சமாக இங்கிலாந்திலிருந்து 3 வீரர்கள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே வீரர் ஒருவர் என மொத்தம் 9 வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது.