
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இத்தொடருக்கான அனத்து அனைத்துகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து, நியூசிலாந்து அணி அகமதாபாத்தில் மோத உள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 16 பேர் கள நடுவர்களாகவும், 4 பேர் போட்டி நடுவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.