
குரூப் பி பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி பிரிஸ்பேனில் உள்ள காப்பா மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது. அதுவும் கடைசி பந்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் இந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு 2 வாய்ப்புகள் அதிசயமாக கிடைத்தது. எனினும் அதனை தவறவிட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 4 பந்துகளில் 11 ரன்களை அடித்துவிட்டனர். 5வது பந்தில் எதிர்பாராத விதமாக காராவா போல்ட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்களை அடித்தால் வெற்றி என்ற சூழல் உருவானது.