ஐபிஎல் 2021: தொடரிலிருந்து ஆஸி., வீரர்கள் விலகலா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்காளா என்பதை தபோது கூற முடியாதென அந்த அணியின் புதிய தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Trending
இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்வது பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறுகையில்,
“அனைவரும் மீண்டும் ஒன்று கூடிய பிறகு ஐபிஎல் போட்டியில் ஆஸி. வீரர்கள் கலந்து கொள்வது பற்றி விவாதிக்கப்படும். மாலத்தீவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஆஸி. வீரர்கள் இன்றுதான் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் முதலில் குடும்பத்துடன் இணைய வேண்டும்.
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் பங்கேற்க உள்ளனர். அத்தொடர் முடிந்ததும் வங்கதேச அணிக்கெதிரான தொடரும் தயாராகி வருகிறது. இதனால் அவர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா என்பதை ஆலோசனைக்கு பிறகு தான் தெரிவிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now