
No Indian In ICC's Most Valuable Team Of The Women's World Cup (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 12ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7ஆவது முறையாக கோப்பையை வென்றது. இந்திய மகளிர் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளி ஒருவரும் இடம் பிடித்தனர்.
மேலும் இந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் லனிங் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா, பாகிஸ்தான் அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பிடிக்கவில்லை.