
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது, அந்த அளவுக்கு வீரர்கள் அபாரமான ஃபார்மில் இருந்தனர். ஆனால், அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் சோர்வடைந்தனர்.
இந்தத் தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பாபர் ஆசாம், “சாக்லைன் முஷ்டாக், மேத்யூ ஹேடன் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது. அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் மூவரின் பணியும் பெருமைப்படக்கூடியது.