Advertisement

தோனி குறித்து நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்த விராட் கோலி!

நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார் என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
'No one texted me except Dhoni when I quit Test captaincy': Kohli's explosive revelation after India
'No one texted me except Dhoni when I quit Test captaincy': Kohli's explosive revelation after India (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 05, 2022 • 08:17 AM

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 'சூப்பர் 4' சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 05, 2022 • 08:17 AM

அதன்படி களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடியான அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Trending

மேலும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டிக்கு பின் இந்திய வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எம்.எஸ். தோனி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, ''நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும் தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு 'மெசேஜ்' அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை. அதேபோல், அவரால் நான் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை'' என்று தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement