
'No Players Complained About Virat Kohli': BCCI Treasurer Slams Media Reports (Image Source: Google)
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மூத்த வீரர்கள் சிலர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கேப்டன் விராட் கோலி குறித்து புகார் அளித்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதனை மறுக்கும் விதமாக எந்த வீரரும் கோலி மீது எந்த வீரரும் புகாரளிக்கவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஊடகங்கள் இதுபோன்ற அபத்தங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் பிசிசிஐயிடம் புகார் அளிக்கவில்லை. ஒவ்வொருமுறையும் வெளியாகும் தவறான செய்திகளுக்கு பிசிசிஐ விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது” என்று காட்டமாக தெரிவித்தார்.