‘எனது ஓய்வு முடிவே இறுதியானது’ என்று கூறிய டி வில்லியர்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தனது ஓய்வு முடிவே இறுதியானது எனக்கூறி டி வில்லியர்ஸ் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அன்போடு அழைக்கப்படுபவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ். கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர், ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அப்போது முதலே அவரது ஓய்வு முடிவை கைவிடுத்து மீண்டும் சர்வதேச களத்திற்கு தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் டி வில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
Trending
அதற்கு காரணம் அவரது ஆட்டம் மற்றும் ஃபிட்னெஸ். இந்நிலையில் தான் வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.
இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரின் போது அவர் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறுவார் என்ற அந்நாட்டு கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் டி வில்லியர்ஸின் கம்பேக்கிற்காக காத்திருந்தனர். ஆனால் இன்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அணியில் டி வில்லியர்ஸின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கொந்தளித்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடினர்.
இதற்கு பதிலளித்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், “டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. ‘எனது ஓய்வு முடிவு இறுதியானது’ என அவர் சொல்லி விட்டார். அதனால் அவர் சர்வதேச களத்திற்கு மீண்டும் விளையாட வர மாட்டார். அவர் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை” என தெரிவித்துள்ளது.
அவரது கம்பேக் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுட்சர், டிவில்லியர்ஸ் உடன் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பை தொடரிலும் டி வில்லியர்ஸ் பங்கேற்கமாட்டர் என்பது உறுதியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now