
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நெதர்லாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு! (Image Source: Google)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் மீதமுள்ள இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற உள்ள லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நோவா குரோஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.