
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்கஃ கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்தவாக அறிவித்து கயானா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 79 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 57 ரன்களையும் சேர்த்தனர். கயானா அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.