
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. மோசமான துவக்கத்திற்கு பிறகு, மேத்யூ ஷாட்(38), ஷாருக் கான்(22), ஷாம் கர்ரன்(22), ஜித்தேஷ் சர்மா(25) ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டுத்தடுமாறி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய மோகித் சர்மா, நான்கு ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
154 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரர் சகா(30) மீண்டும் ஒருமுறை நல்ல துவக்க அமைத்துக்கொடுத்து வெளியேறினார். சாய் சுதர்சன்(19), ஹர்திக் பாண்டியா(8) இருவரின் விகவ்ட்டை தூக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. ஆனால் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 67 ரன்கள் அடித்துக்கொடுத்தார்.
மிகச் சிறப்பான துவக்கம் குஜராத் அணிக்கு கிடைத்த பிறகு, 154 ரன்களை விரைவில் எட்டி போட்டியை முடித்து விடுவார்கள் என நினைத்தபோது, பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான பந்துவீச்சு மூலம் ஆட்டத்தை கடைசி ஓவர்வரை எடுத்துச் சென்றது. பரபரப்பாக சென்ற இப்போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது