
ஐபிஎல் 16ஆவது சீசனின் இரண்டாம் பாதியின் தொடக்க போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டாவது போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. எட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும்.
இந்த போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்பொழுது மேக்ஸ்வெல், லோம்பரர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது விக்கட்டுகளை வீழ்த்தி, நான்கு ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டும் தந்து வரும் சக்கரவர்த்தி அசத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கொல்கத்தா அணி இதற்கு முன் கடைசி ஆட்டத்தில் தன் சொந்த மைதானத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் 49 ரன்களை வருண் சக்கரவர்த்தி விட்டுக்கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.