நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை - ஐடன் மார்க்ரம்!
இன்றைய போட்டியில் நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேசியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற எய்டன் மார்க்ரம் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் 38 ரன்கள், திலக் வர்மா 17 பந்துகளில் 37 ரன்கள், ரோஹித் சர்மா 28 ரன்கள் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 40 பந்துகளில் 64 ரன்கள் அடித்துக் கொடுக்க, 20 மூவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த இலக்கை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஹாரி புரூக் ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 48 ரன்கள், ஹென்றிச் கிளாசன் 16 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. கடந்த போட்டியில் அசத்திய கேப்டன் எய்டன் மார்க்ரம் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் 19.5 ஓவர்களில் 178 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
போட்டி முடிந்த பிறகு, தோல்வியடைந்த அணியின் கேப்டன் ஐடம் மார்க்ரம் பேசுகையில், “இன்றைய இரவு நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டிய இளம் வீரர்களுக்கு கண்டிப்பாக பாராட்டுகள் தெரிவித்தாக வேண்டும். இன்றைய போட்டியில் பிட்ச், போட்டி முழுவதும் ஒரே மாதிரியாக செயல்பட்டது. மாற்றம் எதுவும் இல்லை.
சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பந்து சற்று நின்று வந்தது. இதை எதிர்கொள்வதற்கு கடினமாகவே இருந்தது. மைதானத்தின் இரண்டாம் பாதியில் ஈரப்பதம் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி ஈரப்பதம் வரும் பட்சத்தில் ஆட்டம் நமக்கு சாதகமாக இருக்கும் என்று முதலில் பவுலிங் முடிவை எடுத்தேன். கடைசி வரை ஈரப்பதம் வரவில்லை. எங்களுடைய மைதானத்தில் போட்டியை இழந்தது சற்று வருத்தம் அளித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் இங்கு விளையாடுவதற்கு முன்பு நிறைய சரி செய்துகொள்ள வேண்டியது இருக்கிறது. சரி செய்துகொண்டு அடுத்த போட்டிக்கு திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now