
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி எம்.பி.யுமானவர் கவுதம் கம்பீர். இந்திய அணிக்காக பல முக்கிய வெற்றிகளை கம்பீர் பெற்று தந்துள்ளார். தற்போது லக்னோ அணியின் மெண்டராக உள்ள கம்பீர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதில், இந்திய அணியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், விராட் கோலியின் கேப்டன்ஷிப் விவகாரம் குறித்தும் கம்பீர் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசையில் இருக்கும் பிரச்சினைகளே காரணம். ஆனால் என்னை பொறுத்தவரை ஆல் ரவுண்டர், ஃபினிஷர் என்று எல்லாம் பார்க்க மாட்டேன். அது ஊடகங்கள் கூறும் வார்த்தைகள். எதிரணியை விட கூடுதலாக ரன் அடிக்க வேண்டும், எதிரணியின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதே என் கொள்கை. கிரிக்கெட் ஒரு சுலபமான விளையாட்டு. ஆனால் நீங்கள் தான் அதனை கடுமையானதாக எண்ணி கொள்கிறீர்கள்.