Advertisement
Advertisement
Advertisement

நான் நானாக இருக்க விரும்புகிறேன் - விராட் கோலி!

வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் என்னால் சுயமாக இருக்க முடியாது என விராட் கோலி பேட்டியளித்தார்.

Advertisement
"Nothing To Be Shocked...": Virat Kohli Opens Up About Quitting RCB Captaincy (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 24, 2022 • 06:25 PM

கடந்த வருடம் ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 24, 2022 • 06:25 PM

இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பேசுகையில், “என்னால் முடியும் என எண்ணுவதற்கும் அதிகமான பொறுப்புகளைக் கையாள மாட்டேன். என்னால் நிறைய செய்ய முடியும் எனத் தோன்றினாலும் அதன் வேலையில் என்னால் ஈடுபாடு காட்ட முடியவில்லையென்றால் அதைச் செய்ய மாட்டேன். 

Trending

உங்கள் சூழலில் இல்லாத ஒருவரால் உங்களுடைய முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியாது. வெளியே, மக்களுக்கென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களிடம் நிலைமையை விளக்குவேன். என்னுடைய பணிச்சுமையை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். 

என்னுடைய முடிவை இன்னும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்க விரும்பவில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை. வாழ்க்கைத் தரம் தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட்டின் தரமும் எனக்கு மிக முக்கியம். தினமும் என்ன செய்து வருகிறோமோ அதையே செய்யத் தோன்றும். எண்ணிக்கையை விடவும் தரம் முக்கியம் என்பதைக் கடைசியில் அறிவீர்கள். 

கடின உழைப்பில் எண்ணிக்கையையும் அதைச் செயல்படுத்துவதில் தரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். வேலையில் எண்ணிகைக்கு முக்கியத்துவம் அளித்தால் சீக்கிரம் சோர்ந்துவிடுவீர்கள். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் நான் நானாக இருக்க முடியாது.வேறு ஆளாக மாறிவிடுவேன். 

நான் நானாக இருப்பதால் தான் இந்நிலையை அடைந்துள்ளேன். அதனால் மக்களால் என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. அதனால் தான் என் குடும்பத்தினர், என் நண்பர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். நான் நானாக இருப்பதால் தான் அது சாத்தியமாகிறது” என்று தெரிவித்தார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement