
டி20 உலககோப்பையில் இந்தியா, வங்கதேசம் மோதிய ஆட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதில் குறிப்பாக, விராட் கோலி ஃபேக் பீல்டிங் செய்ததாக வங்கதேச வீரர் நூருல் ஹசன் கூறினார். இதனால் எங்களுக்கு வரவேண்டிய 5 ரன்களை நடுவர்கள் தராத காரணத்தால் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று கூறினார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றச்சாட்டினர். இந்த நிலையில், ஐசிசி விதிப்படி, பேட்ஸ்மேன்கள் ரன் ஓடுவதை தடுக்கும் வகையில் பந்து கையில் இல்லாமலே, பந்தை பிடித்து எறிவது போல் செய்கை காட்டி, அதனை நடுவர்கள் கவனித்தால் மட்டுமே 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும். ஆனால் கோலி செயும் போது, வங்கதேச வீரர்கள் ரன்களை ஓடி எடுத்து விட்டனர்.
மேலும் இது குறித்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகாரும் அளிக்கவில்லை. இதனை நடுவர்களும் பார்க்காத நிலையில், வங்கதேச வீரர் நூருல் ஹசன், ஐசிசி நடுவர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது ஐசிசி விதிகளுக்கு புறம்பானது என்பதால் , நூருல் ஹசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.