
MI New York vs Washington Freedom Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி, ஒரு சிக்ஸர் என 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் எம்ஐ நியூயார்க் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. இரு வலிமையான அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
NY vs WAS Match Details
- மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs வாஷிங்டன் ஃப்ரீடம்
- இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
- நேரம் - ஜூன் 21, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)